மாரி-2 படத்தின் வில்லன் டொவினோ தாமஸ்ஸுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Thursday,April 15 2021]

இயக்குநர் பாலாஜி மோகன், நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் மாரி-2. இந்தப் படத்தின் வில்லனாக நடிகர் டொவினோ தாமஸ் நடித்து இருந்தார். ஏற்கனவே தமிழில் “அபியும் அனுவும்” படத்தில் நடித்த இவர் மாரி-2 படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டப்பட்டார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான டொவினோ ““என்னு நின்டே மொய்தீன்”, “லூசிஃபர்” போன்ற படங்களில் நடிப்புக்காக ஏராளமான ரசிகர்களை பெற்று இருக்கிறார். அவர் தற்போது தமிழில் ஒரு சில படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டொவினோ வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். ஆனால் எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலே தொற்று உறுதியாகியுள்ளது” எனத் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் மாதவன், அமீர்கான், நகைச்சுவை நடிகர் செந்தில் போன்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு எற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்ஸுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

More News

டெல்லியில் முழு ஊரடங்கு....! முதல்வர் அறிவிப்பு...!

வாரத்தின் இறுதி நாட்களில் டெல்லியில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...! வானிலை மையம்...!

தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

மீண்டும் துவங்கிய ஆல்பாஸ்… பஞ்சாப் மாநிலத்தின் முதல் அறிவிப்பு!

கடந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு பெரும்பாலான மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் ரிவல்டை வெளியிட்டு இருந்தன.

பெரும் அரசியல் தலைகளை பின்னுக்கு தள்ளிய 'நாம் தமிழர்' காளியம்மாள்....! இது புதுசா இருக்குப்பா...!

தமிழக சட்டப்பேரவை முடிந்தநிலையில், அரசியல் கட்சியினர் தேர்தல் முடிவை எதிர்ப்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.

ரத்துச் செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- தமிழக அரசு விளக்கம்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.