க்ரைம் படங்கள் இயக்க மிஷ்கினுக்கு தடை ஏன்? ஹீரோ விளக்கம்
- IndiaGlitz, [Wednesday,December 26 2018]
பிரபல இயக்குனர் மிஷ்கின் க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்க சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. இந்த தடையை நீதிமன்றம் வரை சென்று பெற்ற நடிகர் மைத்ரேயா, இந்த தடையை பெற்றது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'சைக்கோ' கதையை தான் தன்னிடம் கடந்த 2015ஆம் ஆண்டு கூறியதாகவும், இந்த படத்தை இயக்க தனது தந்தையிடம் ரூ.1 கோடியை இயக்குனர் மிஷ்கின் பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும் ஆனால் சொன்னபடி தன்னை வைத்து இந்த படத்தை இயக்காமல் உதயநிதியை வைத்து இயக்கியவதால் நீதிமன்றம் செல்ல நேரிட்டதாகவும் மைத்ரேயா கூறினார்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வரவேண்டுமானால் இயக்குனர் மிஷ்கினுடன் பேச வேண்டும் என்றும், ஆனால் தன்னையும் தனது தந்தையையும் மிஷ்கின் சந்திக்க மறுக்கின்றார் என்றும் மைத்ரேயன் கூறியுள்ளார். மிஷ்கின் மீது நானும் எனது தந்தையும் அளவுகடந்த மரியாதை வைத்திருப்பதாகவும், எளிதில் பேசி முடிக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் வரை செல்ல வைத்ததற்கு அவரே காரணம் என்றும் மைத்ரேயன் மேலும் கூறியுள்ளார்.