டிசம்பர் வரை சம்பளம் இல்லாமல் நடிக்க போகிறேன்: பிரபல குணச்சித்திர நடிகர்

கொரோனா தொற்று காரணமாக கோலிவுட் திரையுலகில் அனைத்து படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடங்கியதால் தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகி உள்ளது. குறிப்பாக அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களில் முதலீடு செய்த தயாரிப்பாளருக்கு வட்டி கஷ்டமே பெருமளவு இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தயாரிப்பாளரின் இக்கட்டான நிலையை புரிந்து கொண்ட ஒரு சில நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சம்பளத்தை 25 சதவீதம் குறைத்து வரும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம். விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மற்றும் இயக்குனர் ஹரி ஆகியோர் தங்கள் சம்பளத்தை 25% குறைத்துக் கொள்வதாக அறிவித்து உள்ளனர் என்பதும் ஏற்கனவே தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் அருள்தாஸ், தான் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நடிக்கும் எந்த படத்திற்கும் சம்பளம் வேண்டாம் என்றும் என்று அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பால் கோலிவுட் திரையுலகில் ஆச்சரியம் ஏற்பட்டது. இதேபோல மற்ற நடிகர்களும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்து தயாரிப்பாளரின் நஷ்டத்தை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.

நடிகர் அருள்தாஸ் சமீபத்தில் வெளியான ‘மகாமுனி’, ‘வெண்ணிலா கபடிக்குழு 2’, ‘ராட்சசி’, ‘பேரன்பு’ உள்பட நூற்றுக்கணக்கான படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

More News

'வாத்தி கம்மிங்' பாடல்: அனிருத் வெளியிட்ட நெகிழ்ச்சியான வீடியோ!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொரோனா பரபரப்பு முடிந்த

'தேவர் மகன்' பாடலுக்கு மனைவி, குழந்தையுடன் நடனம் ஆடிய பிரபல கிரிக்கெட் வீரர்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

உதவித்தொகை வாங்க நேரில் வரவேண்டாம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சமீபத்தில் நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே.

தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி: டாஸ்மாக் தீர்ப்பு குறித்து கமல்ஹாசன்

தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவுக்கு தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாமா???

கொரோனா வைரஸ் பரவல் உலக மக்களை கடும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.