சீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக சீனாவில் வுஹான் மாகாணத்தில் மட்டுமே கொரோனா ("novel" coronavirus) வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த வைரஸ் தற்போது ஹுபே நகரத்தில் விரைவாகப் பரவி வருவதால் சீன சுகாதாரத் துறை அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பினால் சீனாவில் 132 பேர் இறந்துள்ளனர். மேலும் 4,500 பேருக்கு இந்த வைரஸ் தொற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஹுபே மாகாணத்தில் இந்தியர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. இது குறித்த தகவலை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இந்தியா தொடர்பில் இருப்பதாகவும், ஹுபேவில் வசிக்கும் இந்தியர்களின் உடல் நலத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.
தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்தும் விதமாக வுஹான், ஹுபே போன்ற நகரங்களின் போக்குவரத்து, விமானச் சேவை அனைத்தையும் சீனா அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்தத் தடை நீக்கப் பட்டவுடன் அங்குள்ள இந்தியர்கள் பத்திரமாக இந்தியாவிற்கு மீட்கப் படுவார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உறுதி அளித்து உள்ளார்.
பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் தற்போது மலோசியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோரோனா வைரஸ் தொற்று 7 பேருக்கு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது தான் வருத்தத்தை அளிக்க கூடியதாக இருக்கிறது. மேலும் மலேசியாவில் 78 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டு சுகாதாரத் துறை சிகிச்சை அளித்து வருவதும் குறிப்பிடத் தக்கது.
கொரோனா வைரஸ் பரவலை அடுத்து மலோசியாவில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மலேசியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் கணிசமானோர் சீனர்கள். தற்போது வைரஸ் பரவல் காரணமாக விமான சேவை முடக்கப் பட்டுள்ளதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout