பிஞ்சு குழந்தையுடன் ஐஸ்கிரீம் விற்றப்பெண், அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வெற்றிக்கதை!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் 6 மாத பிஞ்சு குழந்தையுடன் ஐஸ்கிரீம் விற்ற இளம்பெண் தற்போது அதே பகுதியில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று உள்ளார். இந்த வெற்றிக் கதையைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு கேரள முதல்வர் முதற்கொண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வரை அனைவரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
கேரளாவின் திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வந்த இளம்பெண் தன்னுடைய 18 வயதிலேயே 6 மாதக் குழந்தைக்கு தயாக மாறிவிட்டார். ஆனால் அவர் தேர்தெடுத்த காதல் கணவன் அவரைக் கைவிட, பெற்றோர்களும் அவரை கைவிட்ட நிலையில் அவருடைய பாட்டியின் ஆதரவுடன் ஐஸ்கிரீம் விற்று வாழ்க்கை நடத்தி உள்ளார். வர்கலா எனும் சுற்றுலா பகுதியில் ஐஸ்கிரீம், லெமன் ஜுஸ், மசாலா பொருட்கள் விற்று வாழ்க்கை நடத்தத் தொடங்கிய ஆனி சிவா படிப்பை மட்டும் விடாமல் தொலைதூரக் கல்வியில் படிப்பை தொடர்ந்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் PG முடித்துவிட்ட ஆனி சிவா, உறவினர் ஒருவரின் உதவியால் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறார். அவரது அயராத கனவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டில் கான்ஸ்டபிளாகவும் உயர்ந்து இருக்கிறார். இருந்தாலும் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்த தொடங்கிய ஆனி சிவா கடந்த 2019 ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்ரர் தேர்வில் தேர்ச்சிப் பெற்று பயிற்சியிலும் கலந்து கொண்டார்.
தற்போது 31 வயதாகும் ஆனி சிவா தன்னுடைய இளம் வயதில் ஐஸ்கிரீம் விற்ற அதே பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று உள்ளார். இந்தத் தகவல் கேரளா முழுவதும் காட்டுத் தீயாய் பரவி ஆனி சிவாவிற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வரிசையில் கேரள முதல்வர் முதற்கொண்டு மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வரை பலரும் எஸ்.ஐ ஆனி சிவாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments