பிக்பாஸ் வரலாற்றிலேயே அமைதியாக ஆரி செய்த சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரி தான் டைட்டில் வின்னர் என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் முறையான அறிவிப்பு மட்டுமே அறிவிக்கப்பட வேண்டிய நிலை இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர்
இந்த நிலையில் பிக்பாஸ் வரலாற்றில் அமைதியாக ஆரி செய்த ஒரு மிகப்பெரிய சாதனை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை அதிக முறை நாமினேட் செய்யப்பட்டு சேவ் செய்யப்பட்டவர் என்ற வகையில் ஆரி ஒரு சாதனையை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் ஏழு முறை நாமினேட் செய்யப்பட்டு சேவ் செய்யப்பட்டார். அதேபோல் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பொன்னம்பலம் மற்றும் மும்தாஜ் ஆகியோர் ஏழு முறை நாமினேட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
மூன்றாவது சீஸனில் மேற்கண்ட இரண்டு பேர்களின் சாதனையையும் முறியடித்தார் கவின். அவர் எட்டு முறை நாமினேட் செய்யப்பட்டு சேவ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நான்காவது சீசனில் ஆரி இதுவரை 11 முறை நாமினேட் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் 11 முறையும் அவர் முதல் தடவையாக சேவ் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மொத்தமே 14 வாரங்கள் நடந்துள்ள இந்த போட்டியில் முதல் வாரம் மற்றும் அவர் கேப்டனாக இருந்த வாரங்கள் தவிர கிட்டத்தட்ட அனைத்து வாரங்களிலும் ஆரி நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் அதேபோல் ஒவ்வொரு முறையும் மக்களின் வாக்குகளை பெற்று முதல் நபராக அவர் சேவ் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆரியின் இந்த சாதனை, மேற்கண்ட மூன்று சீசன்களில் உள்ள சாதனையை முறியடித்தது மட்டுமின்றி இந்த சாதனையை வரும் சீசன்களிலும் யாராவது நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com