நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒரு வார்த்தை, என் வாழ்வை மாற்றியது… பிரபல நடிகை புகழாரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் பிரபல நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா வாழ்வை நிறைவு செய்திருக்கிறார். மேலும் கலைத்துறையில் தனது வளர்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் போன்ற உச்சநட்சத்திரங்கள் கூறிய அந்த ஒரு வார்த்தைதான் ஊக்கத்தைக் கொடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை ராணி முகர்ஜி, நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து “ஹேராம்“ படத்தில் நடித்திருந்தார். 16 வயதில் சினிமா துறைக்கு வந்த நடிகை ராணி தனது ஆரம்பகால சினிமா அனுபவத்தைக் குறித்து தற்போது “இந்தியா டுடே“ பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் நான் நடிகையாக மாறுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஆரம்பத்தில் எனது அம்மாவிற்குத்தான் இந்த கனவு இருந்தது. அவருடைய வற்புறுத்தலில் முதல் படத்தில் நடித்தேன். காரணம் ஒருதிரைப்பட நாயகிக்கான உயரம், நல்ல குரல்வளம் எதுவும் என்னிடம் இல்லை. மேலும் நான் கோதுமை நிறத்தில் இருந்தேன். நான் ஸ்ரீதேவி, மாதுரி தீட்ஷித், ஜுஹி, ரேகா போன்றவர்களை பார்த்து வளர்ந்தேன்.
பின்பு திரைத்துறைக்கு வந்தபோது உச்ச நட்சத்திரங்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர். அவர் “உங்கள் உடல் உயரத்தை வைத்து உங்கள் வெற்றியை அளவிட முடியாது. ஆனால் தொழில் ரீதியாக உங்களை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் நீங்கள் அடையும் உயரம் மற்றும் வெற்றியும் இருக்கும்“ என்று குறிப்பிட்டார். இதேபோன்ற பிற நட்சத்திரங்களும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
இந்த வார்த்தைகள்தான் என்னை சினிமாவில் நிலைக்க வைத்தது. பின்பு வழக்கமாக ஒரு நாயகி கடைப்பிடிக்கின்ற அனைத்து மரபுகளையும் உடைத்தேன் என்று ராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். பெங்காலி குடும்பத்தில் பிறந்த ராணி முகர்ஜியின் அப்பா ஒரு இயக்குநர் என்பதும் அவருடைய அம்மா ஒரு பின்னணி பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர ஒன்றுவிட்ட சகோதரி காஜேல் பிரபல பாலிவுட் நடிகையாக அப்போதே ஜொலித்தார். இவருடைய சகோதரரும் ஒரு இயக்குநர். இப்படி பாரம்பரியமான திரைக் குடும்பத்தில் இருந்துவந்த நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய 25 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார். அதையொட்டி தனக்கு ஆரம்பத்தில் ஊக்கம் அளித்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் பிற சினிமா நட்சத்திரங்களையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments