போலீசாரின் மெத்தனத்தால் உயிரோடு எரிக்கப்பட்ட பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

பெண்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மீடூ உள்பட பல வழிகள் இருந்தாலும் தொடர்ந்து பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதில் கொடுமையிலும் கொடுமையாக பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் கொடுக்கும் புகார்களை ஒருசில காவல்துறையினர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான்.. இப்படி ஒரு கொடூரமான சம்பவம் உபி மாநிலத்தில் நடந்துள்ளது.

உபி மாநிலத்தில் உள்ள சீதாபூர் என்ற பகுதியை சேர்ந்த 28 வயது பெண், காட்டில் இயற்கை உபாதைக்காக சென்றபோது இரண்டு இளைஞர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க இரண்டு முறை சென்றபோது காவல்துறை அதிகாரிகள் இந்த புகாரை ஏற்று கொள்ளவில்லை. அதனையடுத்து நேற்று 3வது முறையாக அந்த பெண் புகார் கொடுக்க சென்றார்.

அப்போது வழிமறித்த அந்த இரண்டு வாலிபர்கள் மறைவான பகுதிக்கு அந்த பெண்ணை தூக்கி சென்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இதனால் அந்த பெண் அலறினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தின் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அந்த பெண் உயிருக்காக போராடி வருகிறார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த பெண்ணிடம் புகாரை வாங்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

More News

அவதூறு வழக்கால் கிரிக்கெட் வீரர் பெற்ற மிகப்பெரிய தொகை

ஆஸ்திரேலியாவில் பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ்ட் கெயில் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கில் அவருக்கு $220 ஆயிரம் நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.

லைகா நிறுவனம் அறிவித்த அதிகாரபூர்வ '2.0' வசூல் விபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியது

கோலிவுட்டை நோக்கி வரும் ஹாலிவுட் நடிகைகள்

பத்து வருடங்களுக்கு முன் கோலிவுட் என்ற ஒரு திரையுலகம் இருந்ததே ஹாலிவுட் கலைஞர்களுக்கு தெரியாது.

இப்படி ஒரு ரிகார்டிங் வேர்ல்டிலேயே நடந்ததில்லை: 'மரண மாஸ்' தலைவர் குத்து குறித்து அனிருத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ரஜினியின் ரசிகர்களுக்கு வெளிவரவுள்ளது என்பது தெரிந்ததே

சென்னை மெரீனாவில் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டம், ஒருசில மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் சிறிய அளவில் ஆரம்பமானது.