100 வயது மூதாட்டியை கட்டிலோடு இழுத்து வங்கிக்கு சென்ற 60 வயது மகள்: அதிர்ச்சி வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
100 வயது மூதாட்டியை அவரது 60 வயது மகள் கட்டிலோடு வங்கிக்கு இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரிசா மாநிலத்தில் 100 வயது சேர்ந்த பெண் ஒருவருக்கு ஜன் தன் வங்கி கணக்கில் ரூபாய் 1500 வந்துள்ளது. அந்த பணத்தை எடுப்பதற்காக அவரது மகளான 60 வயது பெண் வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் வங்கி மேலாளர் வங்கி கணக்கு இருக்கும் நபர் நேரடியாக வந்தால் மட்டுமே பணம் கொடுக்கப்படும் என கூறியதாக தெரிகிறது.
தன்னுடைய அம்மாவுக்கு 100 வயது ஆகிறது என்றும் அவரது உடல்நிலை சரியில்லை என்று கூறியும் வங்கி மேலாளர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனை அடுத்து வேறு வழியின்றி தனது அம்மாவை கட்டிலில் படுக்கவைத்து வங்கிக்கு அந்த கட்டிலை இழுத்து கொண்டே சென்றுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து அந்த வங்கியின் மேலாளர் விளக்கம் கூறிய போது ’அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது வங்கி ஊழியர் மறுநாள் வருவார் என்று கூறியதாகவும் ஆனால் அதற்குள் அவசரப்பட்டு அந்த பெண் தனது அம்மாவை கட்டிலில் படுக்க வைத்து இழுத்து வந்து உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வங்கிகள் இந்த ஊரடங்கு நேரத்தில் அதிக கெடுபிடி செய்யாமல் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
A woman in Odisha’s Naupara has claimed that she had to pull her over 100-year-old mother to the bank on a cot to get the latter’s pension money after the manager demanded physical verification of the account holder. pic.twitter.com/sc8kavbkXk
— STAY AT YOUR HOME !!! (@Unbiasedmedia2) June 15, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments