கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது: ரஜினியை கலாய்த்த பெட்டிக்கடைக்காரர்

  • IndiaGlitz, [Monday,December 24 2018]

ஒருசில கடைகளில் கடன் கிடையாது என்பதை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக அதே நேரத்தில் சுவாரஸ்யமாக அறிவிப்பு பலகை மூலம் கூறுவதுண்டு. அவற்றில் ஒன்றுதான் 'இன்று ரொக்கம் நாளை கடன்'. இதேபோல் நடக்காத ஒரு விஷயத்தை கூறி அது நடக்கும் வரை கடன் கிடையாது என்று சில குறும்பர்கள் அறிவிப்பு பலகை வைப்பதுண்டு.

அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் 'ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது' என்ற அறிவிப்பு பலகையை வைத்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 20 வருடங்களாக கூறிக்கொண்டே இருந்தார். ஒருவழியாக ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்த பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வருவது உறுதி என்றும் கட்சி ஆரம்பிப்பதும் உறுதி என்றும் அறிவித்தார்.

ஆனால் அவரது அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட பின்னர் இன்னும் அதிகாரபூர்வமாக கட்சி தொடங்கவில்லை. இன்னும் பலர் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்பதையே நம்பவில்லை. இந்த நிலையில் தான் பெட்டிக்கடைக்காரர்
'ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை கடன் கிடையாது' என்ற அறிவிப்பு பலகையை வைத்து ரஜினியை கலாய்த்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பு செய்வது மிக எளிதான ஒன்று என்றும், வந்தால் வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்கு சரியான நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், கலாய்ப்பவர்கள் கண்டு வியக்கும் வகையில் அரசியல் எண்ட்ரி இருக்க வேண்டும் என்றும் ரஜினி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.