அமீரை கொலை செய்ய முயற்சி: பாரதிராஜா திடுக் தகவல்
- IndiaGlitz, [Monday,June 11 2018]
சமீபத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் வட்டமேஜை விவாத நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமீர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீதும், அந்த தொலைக்காட்சி மீதும் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்குப்பதிவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து பாரதிராஜா கூறியபோது, 'இயக்குனர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது என்றும் ஜனநாயக நாட்டில் பத்திரிக்கை உரிமை ஒடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக இயக்குநர் அமீருக்கு ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாக டிஜிபி அலுவலகத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர் புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.