கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், இந்திய விமான நிலையங்களில் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப் படுகின்றனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக எந்தப் பதிவும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய சிலருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதால் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேலும் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள கேரளாவில் 100 க்கும் மேற்பட்டோரை சுகாதாரத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தற்போது மக்கள், தங்களை கொரோனா வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை, இந்தியத் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) வெளியிட்டுள்ளது. இந்த அறிவுரைகளைப் பின்பற்றுமாறு மத்திய அரசும் பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
1. கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருக்கும் இடங்களை நல்ல சுகாதாரமான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். இருமல் - தும்மலுக்குப் பிறகும் கழிப்பறைகளைப் பயன்டுத்திய பிறகும் உணவை கையாளும் போதும் அல்லது உணவை தயார் செய்யும் போதும் நோயாளிகளைச் சந்திக்கும் பொழுதும் அல்லது அவர்களின் பொருட்களைத் தொடும் பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. வெறும் கையால் கண்கள் மற்றும் மூக்கினைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. நெரிசலான இடங்களுக்குச் செல்லும் போது முகமூடிகளை அணிந்து செல்ல வேண்டும்.
4. மருத்துவர்கள் நோயாளிகளைப் பரிசோதனை செய்யும் போதும் நோயாளிகளின் பொருட்களை கையாளும் போதும் முகமூடிகளைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும்
5. இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது, வாய், மூக்கை மறைப்பதற்காக வெறும் கைகளைப் பயன்படுத்தாமல் பருத்துத் துணி மற்றும் டிஸ்ஸுக்களைப் பயன்படுத்தலாம். பயன்படுத்திய டிஸ்ஸுக்களை முழுவதுமாக அப்புறப் படுத்த வேண்டும். கைக்குட்டை மற்றும் டிஸ்ஸு கிடைக்காத நேரங்களில் கைகளின் மேல் பகுதிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் உடனே கைகளைச் சுத்தம் செய்ய மறக்க கூடாது.
6. நல்ல சுகாதார முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ் தொற்றில் இருந்து முழுவதுமாகத் தப்பித்துக் கொள்ளலாம்.
7. காய்கறி மற்றும் பழங்களை சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக கழுவிய பின்பு உட் கொள்ள வேண்டும்.
8. நல்ல ஆரோக்கியமான உணவு முறைகளைக் கடைபிடித்தல், உடற் பயிற்சி செய்தல், நல்ல தூக்கம் போன்றவற்றைக் கடைபிடிக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் போது வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments