ஊட்டி அருகே மாயமான 7 பேர் கதி என்ன? மாறுபட்ட தகவல்களால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊட்டி அருகே சுற்றுலா சென்ற 7 பேர் திடீரென மாயமானதாக வெளிவந்த தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த 7 நண்பர்கள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கிருந்த வனப்பகுதியான மசினகுடி என்ற பகுதிக்கு அவர்கள் சென்றபோது திடீரென மாயமானதாக தெரிகிறது. அவர்களுடைய செல்போன்களும் சிக்னல் கிடைக்காததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் 7 பேர்களின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வனத்துறையினர் உதவியுடன் போலீசார் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
இந்த நிலையில் கல்லடை மலைப்பகுதியில் அவர்கள் சென்ற இன்னோவா கார் விபத்துக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 7 பேர்களும் விபத்தில் பலியாகியிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் 7 பேர்களில் இரண்டு பேர் உயிருடன் இருப்பதாக இன்னொரு தகவல் வெளிவந்துள்ளது.
7 பேர்கள் நிலை குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதால் அவர்களுடைய குடும்பத்தினர் பெரும் கவலையில் முழ்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments