ஜோலி முடிஞ்சது… 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம்!!!

  • IndiaGlitz, [Thursday,July 16 2020]

 

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் உலகின் பெரும்பலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. தற்போது உலகிலேயே பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 25 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா தாக்கம் ஆரம்பித்ததில் இருந்தே விமானம் பயணம் முற்றிலும் குறைந்து விட்டது. தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட்டு இருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப் படுகின்றன. இதனால் பயணிகள் வரத்து குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

பிரபல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முன்னதாக தற்காலிக விடுப்பு வழங்கி தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இதனால் ஊழியர்களுக்கு பகுதி அளவு சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்து வந்தது. மேலும் அமெரிக்க அரசு ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பணியை இழக்காமல் இருக்க வேண்டி, அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்டத் தொகையை வழங்கி இருககிறது. இந்தத் தொகை வருகிற ஆகஸ்ட் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 25 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்போது அந்நிறுவனம் தங்களது பணியாளர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் செயலில் ஈடுபட ஆரம்பித்து இருக்கிறது.

அந்நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் வருகிற அக்டோபர் முதல் நிலைமை சரியாகும் எனக் கருத்துக் கூறி வருகின்றனர். அந்நிறுவனத்தின் சிஇஓ தற்போது அமெரிக்காவில் பல மாகாணங்கள் மீண்டும் கடுமையான ஊரடங்கிற்கு ஆளாகியிருக்கிறது. அதைத்தவிர கொரோனா பாதிப்பு முற்றிலும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விமான சேவை மக்களுக்குத் தேவைப்படாது எனத் தெரிவித்து ஊழியர்களின் பணி நீக்க ஆணையில் கையெழுத்து இட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு யுனைட்டைட் ஏர்லைன்ஸ் 36 ஆயிரம் விமான நிலைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகத் தெரிவித்து இருந்தது. அதைத்தவிர டெல்டா நிறுவனம் 2000 பைலட்டுகளுக்கு தற்காலிக பணி விடுப்பு கொடுத்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இதுவரை அதன் 37 விழுக்காட்டு ஊழியர்களுக்கு அதாவது 10 ஆயிரம் ஊழியர்களுக்கு தற்காலிக பணி விடுப்பு வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர 4500 தரை ஊழியர்கள் மற்றும் 2000 பைலட்டுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி தற்காலிக பணி விடுப்பு வழங்கியிருக்கிறது. மேலும் பணி நீக்கம் தொடர்பான ஆணையும் தற்போது பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

புபோனிக் பிளேக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா மாகாணப் பகுதியில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவுவதாகச் செய்திகள் வெளியாகியது.

எத்தனை நாள் தான் வீட்டில் சும்மா இருப்பது? விளம்பர படத்தில் நடித்த நயன்தாரா

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாததால் மாஸ் நடிகர்கள் முதல் துணை நடிகர்கள் வரை படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்.

சாகுபடி பயிர்களை அழித்து போலீஸார் அத்துமீறல்!!! பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விவசாயக் குடும்பம் தற்கொலை முயற்சி!!!

மத்தியப் பிரதேசத்தின் குணா பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தில் சாகுபடி செய்ததாகக் கூறி போலீஸார் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை ஜேசிபி வாகனம் கொண்டு அழித்துள்ளனர்

கொரோனா வைரஸ் எதிரொலி: மகனுடன் செக்யூரிட்டரி வேலை செய்யும் பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக இருப்பதால் இந்திய திரையுலகின் படப்பிடிப்பு முடங்கியுள்ளது

இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனும் இயக்குனருமான ஹோமோ ஜோ காலமானார். காலமான ஹோமோ ஜோ, இசை அமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் அவர்களின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது