ஜோலி முடிஞ்சது… 25 ஆயிரம் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பும் பிரபல ஏர்லைன்ஸ் நிறுவனம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியால் உலகின் பெரும்பலான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. தற்போது உலகிலேயே பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனமான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 25 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. கொரோனா தாக்கம் ஆரம்பித்ததில் இருந்தே விமானம் பயணம் முற்றிலும் குறைந்து விட்டது. தற்போது ஊரடங்கு விலக்கப்பட்டு விமான சேவை தொடங்கப்பட்டு இருந்தாலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப் படுகின்றன. இதனால் பயணிகள் வரத்து குறைந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
பிரபல அமெரிக்கன் ஏர்லைன்ஸ் முன்னதாக தற்காலிக விடுப்பு வழங்கி தங்களது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இதனால் ஊழியர்களுக்கு பகுதி அளவு சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையும் இருந்து வந்தது. மேலும் அமெரிக்க அரசு ஏர்லைன்ஸ் ஊழியர்கள் பணியை இழக்காமல் இருக்க வேண்டி, அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்டத் தொகையை வழங்கி இருககிறது. இந்தத் தொகை வருகிற ஆகஸ்ட் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு இத்திட்டத்தின் மூலம் 25 பில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் நிலைமையை சமாளிக்க முடியாமல் தற்போது அந்நிறுவனம் தங்களது பணியாளர்களை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பும் செயலில் ஈடுபட ஆரம்பித்து இருக்கிறது.
அந்நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் வருகிற அக்டோபர் முதல் நிலைமை சரியாகும் எனக் கருத்துக் கூறி வருகின்றனர். அந்நிறுவனத்தின் சிஇஓ தற்போது அமெரிக்காவில் பல மாகாணங்கள் மீண்டும் கடுமையான ஊரடங்கிற்கு ஆளாகியிருக்கிறது. அதைத்தவிர கொரோனா பாதிப்பு முற்றிலும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் விமான சேவை மக்களுக்குத் தேவைப்படாது எனத் தெரிவித்து ஊழியர்களின் பணி நீக்க ஆணையில் கையெழுத்து இட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு யுனைட்டைட் ஏர்லைன்ஸ் 36 ஆயிரம் விமான நிலைய ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாகத் தெரிவித்து இருந்தது. அதைத்தவிர டெல்டா நிறுவனம் 2000 பைலட்டுகளுக்கு தற்காலிக பணி விடுப்பு கொடுத்து இருந்தது. இந்நிலையில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் இதுவரை அதன் 37 விழுக்காட்டு ஊழியர்களுக்கு அதாவது 10 ஆயிரம் ஊழியர்களுக்கு தற்காலிக பணி விடுப்பு வழங்கியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதைத்தவிர 4500 தரை ஊழியர்கள் மற்றும் 2000 பைலட்டுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி தற்காலிக பணி விடுப்பு வழங்கியிருக்கிறது. மேலும் பணி நீக்கம் தொடர்பான ஆணையும் தற்போது பிறப்பிக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout