அதிகாலையில் அட்டாக்கை ஆரம்பித்த இந்தியா! புல்வாமாவுக்கு பதிலடியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஒன்று சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் நிகழ்த்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கல் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான பல்வேறு உறவுகள் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் அதிரடி அட்டாக் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அதிரடியாக அட்டாக் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தாக்குதலில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வீசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.
#IndianAirForce strike on #Pakistan by 12 #mirage2000 fighter plan by bombing 10 bomb each weight 100 kg #proudtobeindian #NarendraModi #SurgicalStrike2 pic.twitter.com/rpEtA08pN5
— Yash kaushik (@Gudenia_g) February 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments