அதிகாலையில் அட்டாக்கை ஆரம்பித்த இந்தியா! புல்வாமாவுக்கு பதிலடியா?

  • IndiaGlitz, [Tuesday,February 26 2019]

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பு ஒன்று சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் நிகழ்த்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கல் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான பல்வேறு உறவுகள் துண்டிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில் அதிரடி அட்டாக் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அதிரடியாக அட்டாக் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தாக்குதலில் சுமார் 1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வீசியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும், ஜெயின் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய விமானப்படை விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முராதாபாத் நகருக்குள் ஊடுருவியதை பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார்.

More News

நயன்தாராவின் 'கா' சஸ்பென்ஸ்: கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ரசிகர்கள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'ஐரா' திரைப்படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

த்ரிஷாவின் ஐந்து மில்லியன் மைல்கல்! ரசிகர்கள் வாழ்த்து

தற்போது சமூக வலைத்தளங்கள் என்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஒவ்வொருவரின் சமூகவலைத்தள பக்கமும் ஒரு மீடியா போல் அவ்வபோது பிரேக்கிங் செய்திகளை அளித்து வருகின்றன.

மூன்றே நாளில் லாபத்தை பெற்ற 'எல்.கே.ஜி'

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவான 'எல்.கே.ஜி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் இந்த படத்தின் பட்ஜெட் தொகையை எடுத்துவிட்டதாகவும்,

விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணியா? கமல் விளக்கம்

அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை தேமுதிக நிர்வாகிகள் எடுக்கவில்லை

ஆட்சியை பிடிப்பது எப்போது? புதிய கட்சி ஆரம்பித்துள்ள இயக்குனர் கவுதமன் பேட்டி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே நூற்றுக்கும் மேல் அரசியல் கட்சிகள் இருக்கும் நிலையில் தற்போது இயக்குனர் கவுதமன் 'தமிழ்ப் பேரரசு கட்சி' என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.