அமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்!!! எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காதான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 24,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இறப்பு எண்ணிக்கை 4,000 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், "அடுத்த இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிகவும் துயரமாக இருக்கும். வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்றால் அந்நாட்டில் 2,40,000 பேர் இறக்கக்கூடும் எனவும் வெள்ளை மாளிகை ஆய்வு ஒன்று கணித்துள்ளது. இந்த எண்ணிக்கையை மனதில் வைத்துக்கொண்டே அதிபர் ட்ரம்ப் இவ்வாறு மக்களை எச்சரித்துள்ளார் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளை மாளிகை நிர்வாகக் குழுவில் ஒருவரான டெபோரா பிரிக்ஸ், “இந்த வைரஸ் தொற்றை எதிர்க்கொள்ள மாயாஜால மருந்தோ அல்லது தெரபியோ இல்லை. நாம் அடுத்து வரும் 30 நாட்களுக்கு எப்படி நடந்திருக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இந்த வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என மக்களை எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது நான்கில் மூன்றுபேர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆனாலும் நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டுச் சுகாதாரத்துறை திணறிவருகிறது. பல இடங்கள், புதிய மருத்துவமனைகளாக உருவாக்கப் பட்டு வருகின்றன. ஏப்ரல் 31 வரை சமூக விலகலுக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகமாகி வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதுவரை 1,88,639 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout