அமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்!!! எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!!!

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்காதான் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நேற்று ஒரேநாளில் மட்டும் 24,000 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மேலும் இறப்பு எண்ணிக்கை 4,000 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், அடுத்த இரண்டு வாரங்கள் அமெரிக்காவுக்கு மிகவும் துயரமாக இருக்கும். வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கொரோனா நோய்த்தொற்றால் அந்நாட்டில் 2,40,000 பேர் இறக்கக்கூடும் எனவும் வெள்ளை மாளிகை ஆய்வு ஒன்று கணித்துள்ளது. இந்த எண்ணிக்கையை மனதில் வைத்துக்கொண்டே அதிபர் ட்ரம்ப் இவ்வாறு மக்களை எச்சரித்துள்ளார் என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகை நிர்வாகக் குழுவில் ஒருவரான  டெபோரா பிரிக்ஸ், “இந்த வைரஸ் தொற்றை எதிர்க்கொள்ள மாயாஜால மருந்தோ அல்லது தெரபியோ இல்லை. நாம் அடுத்து வரும் 30 நாட்களுக்கு எப்படி நடந்திருக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இந்த வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என மக்களை எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது நான்கில் மூன்றுபேர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆனாலும் நோய்த்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டுச் சுகாதாரத்துறை திணறிவருகிறது. பல இடங்கள், புதிய மருத்துவமனைகளாக உருவாக்கப் பட்டு வருகின்றன. ஏப்ரல் 31 வரை சமூக விலகலுக்கு அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்திருக்கிறார். நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகமாகி வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதுவரை 1,88,639 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 1,059 ஆக அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்

"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்" !!! கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி!!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகிறது

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து

கடந்த மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1130 பேர் கலந்து கொண்டதாகவும்,

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்றும், அவ்வாறு கலந்து கொண்டு தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியவர்களில்

ஆன்லைனில் ஏமாந்த பிரபல நடிகை: அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு

தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து பிரபலமான நடிகை சினேகா உல்லல் ஆன்லைன் மூலம் ஏமாந்த சம்பவம் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு பாடமாக உள்ளது.