போதை பழக்கத்திற்கு அடிமையான இளம் நடிகர்கள். பிரபல தயாரிப்பாளர் வேதனை
Wednesday, July 12, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த போதை ஒழிப்புத்துறை அதிகாரிகளின் சோதனையில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்கத்தலைவர் சிவாஜிராஜா, பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த கூட்டத்தில் பேசிய தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ''ரேவ் பார்ட்டி என்று கூறப்படும் போதை நடனப்பார்ட்டி என்ற கலாச்சாரம் மும்பையில் உள்ள ஒருசில தனியார் விடுதிகளில் நடைபெற்று வருகிறது. இது ஐதராபாத்துக்கு பரவ வேண்டாம். எனக்கு தெரிந்து சுமார் பத்து முன்னணி நடிகர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களால் சினிமாத்துறைக்கே கெட்ட பெயர் ஏற்படுகிறது. யாருக்கும் தெரியாமல் அவர்கள் இந்த பார்ட்டியை நடத்துவதாக நினைத்து கொண்டிருந்தாலும் காவல் துறையினர்கள் அனைத்தையும் கண்காணித்து கொண்டுதான் இருக்கின்றனர் என்பதை மறந்துவிட கூடாது.
எனவே போதைக்கு அடிமையாகியுள்ள இளம் நடிகர்கள் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் தங்களுடைய பழக்கத்தை மாற்றி கொள்வது நல்லது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments