உலக அளவில் சாதனை படைத்து வரும் இந்திய குழந்தைகள்
Friday, June 2, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் US Scripps National Spelling Bee என்ற ஸ்பெல்லிங் போட்டிகள் 6 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்த போட்டியில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இருந்தும் உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கலந்து கொள்வர். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 90வது ஆண்டு ஸ்பெல்லிங் போட்டியில் 12 வயது இந்திய சிறுமி அனன்யா வினய் என்பவர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அனன்யா $40,000 பரிசினை பெற்றார்.
வெற்றி பெற்ற அனன்யா, 'தனது கனவு நனவாகிவிட்டதாகவும், நான் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த போட்டியில் இரண்டாவது இடம்பெற்றவரும் ஒரு இந்திய சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹன் ராஜீவ் என்ற இந்த இந்திய சிறுவர் ஒரே ஒரு வார்த்தையை மட்டும் ஸ்பெல் செய்வதில் கோட்டைவிட்டார்.
மேலும் இந்த போட்டியில் தொடர்ச்சியாக 13ஆண்டுகளாக இந்திய சிறுவர், சிறுமிகள் தான் முதலிடத்தை பெற்று வருகின்றனர். ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்ட அமெரிக்க சிறுவர், சிறுமிகளை இந்திய மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தோற்கடித்து நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல இந்திய சிறுவர், சிறுமிகள் இந்த போட்டியில் வெற்றி பெற அனன்யா, ரோஹன் ராஜீவ் போன்றவர்கள் பெற்ற பரிசு ஊக்கத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு இந்திய குழந்தைகளுக்கும் நமது வாழ்த்துக்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments